Saturday, July 17, 2010

மகனே, பாவம் செய்தாயோ, திரும்பவும் செய்யாதே

மகனே, பாவம் செய்தாயோ, திரும்பவும் செய்யாதே. ஆனால், செய்தவைகள் உனக்கு மன்னிக்கப்படும்படி மன்றாடு.
2 பாம்பை விட்டு விலகுவது போலப் பாவத்தை விட்டு விலகு. அவைகளின் அண்மையில் போனாயானால், அவைகள் உன்னைத் தம் வயப்படுத்தும்.
மகனே, வறியவனுக்குப் பிச்சையிடுவதை விலக்காதே. எளியவனுக்கு உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே.
2 பசியினால் வருந்துகிறவனைப் பழியாதே. வறியவனை அவனது வறுமையில் புறக்கணியாதே.
3 வறியவனுடைய மனத்தை நோகச் செய்யாதே. வருந்துகிறவனுக்குக் கொடுக்கத் தாமதியாதே.
4 துன்பப்படுகிறவனுடைய மன்றாட்டைத் தள்ளி விடாதே. எளியவனினின்று உன் முகத்தைத் திருப்பாதே.
5 எளியவனுக்கு உன்மீது வருத்தம் உண்டாகாதபடி அவனிடத்தினின்று உன் கண்களை அகற்றாதே. உன்னை மன்றாடுகிறவர்கள் உன் கண் மறைவில் உன்னைச் சபிக்கும்படி விடாதே.
6 மனத்தாங்கலால் உன்னைச் சபிக்கிறவனுடைய மன்றாட்டு கேட்கப்படும். ஏனென்றால் அவனைப் படைத்தவர் அவன் வேண்டுதலைக் கேட்பார்.
7 எல்லா ஏழைகள் மீதும் அன்பாய் நடந்து கொள். முதியோருக்கு உன் மனத்தைத் தாழ்த்தி, பெரியோருக்குத் தலை வணங்கு.
8 மகிழ்ச்சியோடு எளியவனின் மன்றாட்டுக்குச் செவி கொடு. நீ கொடுக்க வேண்டியதை அவனுக்குக் கொடு; சாந்த குணத்தோடு அவனுக்குச் சமாதான வார்த்தைகளைச் சொல்.
9 வருந்தும் எளியவனை அகந்தை கொண்டவனுடைய கையினின்று விடுதலை செய். மனவருத்தம் கொண்டு பின்வாங்காதே.
10 தந்தையற்ற பிள்ளைகளுக்கு நீதி செலுத்துகையில் தந்தையைப் போல் இரக்கம் காண்பித்து, அவர்கள் தாயை ஆதரிப்பவன் போல் இரு.
11 அப்பொழுது, மேலான கடவுளுக்கு நீயும் கீழ்படிதலுள்ள மகனைப் போல் இருப்பாய்; அவரும் தாயை விட அதிகமாய் உன் மீது இரக்கம் கொள்வார்.

No comments:

Post a Comment