Saturday, July 17, 2010

சீராக் ஆகமம்

அதிகாரம் 2
1 மகனே, நீ கடவுளுக்கு ஊழியம் செய்யப் போகையில் நீதியிலும் அச்சத்திலும் நிலைகொண்டு, சோதனைக்குத் தப்ப உன் ஆன்மாவை ஆயத்தப்படுத்து.
2 உன் இதயத்தைத் தாழ்த்தி அமைந்திரு. செவிகொடுத்து நல்லறிவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள். கலக்க நேரத்தில் ஆத்திரப்பட்டு யாதொன்றும் செய்யாதே.
3 ஆண்டவருடைய இரக்கத்தின் காலம் வரைக்கும் காத்திரு. அவரோடு ஒன்றித்துக் கடைசியில் உன் வாழ்க்கை பலன் கொடுக்கும்படி பொறுமையாய் இரு.
4 உனக்கு நேர்வன எல்லாவற்றையும் பொறுத்துக் கொள். துன்பத்தில் திடமாயும், தாழ்வில் பொறுமையாயும் இரு.
5 பொன்னும் வெள்ளியும் நெருப்பினால் சுத்தமாவது போல, மனிதரும் தாழ்ச்சி என்னும் உலையில் தகுதியானவர்கள் ஆகிறார்கள்.
6 கடவுள் பால் உன் விசுவாசத்தை வை; அவர் உன்னைக் காப்பாற்றுவார். செவ்வழியில் சென்று, அவர்பால் உன் நம்பிக்கையை வை; அவருக்கு அஞ்சி நட; நெடுங்காலம் நிலை கொள்வாய்.
7 ஆண்டவருக்கு அஞ்சுவதால் நீங்கள் அவர் இரக்கத்தை அடைவீர்கள். நன்னெறி வழுவாதபடி அவரை மறவாதீர்கள்.
8 ஆண்டவருக்கு அஞ்சும் நீங்கள் அவரை விசுவசியுங்கள்; உங்கள் சம்பாவனை வீணாகாது.
9 ஆண்டவருக்கு அஞ்சும் நீங்கள் அவரை நம்புங்கள்; அவர் இரக்கம் உங்கள் மகிழ்ச்சியாகும்.
10 ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்களே, அவரை நேசியுங்கள்; உங்கள் இதயங்கள் ஒளி பெறும்.
11 மக்களே, எல்லா மனிதரையும் பாருங்கள்; ஆண்டவரை நம்பின எவனும் கலங்கினதில்லையென்று கண்டறியுங்கள்.
12 அவருடைய கட்டளைகளில் நிலைநின்றவன் எவன் கைவிடப்பட்டான்? அவரை மன்றாடினவன் எவன் புறக்கணிக்கப்பட்டான்?
13 ஆண்டவர் தயவும் இரக்கமும் உள்ளவராதலால் துன்ப நேரங்களில் பாவங்களை மன்னிப்பார்; உண்மையாகத் தம்மைத் தேடுகிறவர்களை ஆதரிக்கிறார்.
14 கபடுள்ள இதயத்திற்கும், அக்கிரம உதடுகளுக்கும், தீச்செயல்களைச் செய்யும் கைகளுக்கும், பூமியில் இரு வழியாய் நடக்கும் பாவிக்கும் கேடாம்.
15 கடவுளை விசுவாசியாத தீநெறியாளர்க்கும் கேடாம். ஆகையினால், அவர்கள் அவரால் காப்பாற்றப்பட மாட்டார்கள்.
16 பொறுமையை இழந்தவர்களுக்கும், செவ்வழிகளை விட்டகன்றவர்களுக்கும், தீயவழிகளில் உட்பட்டவர்களுக்கும் கேடாம்.
17 ஆண்டவர் தங்களுடைய நடத்தையைச் சோதிக்கையில் அவர்கள் என்ன செய்வார்கள்?
18 தெய்வ பயமுள்ளவர்கள் ஆண்டவருடைய வார்த்தைகளை விசுவசியாமல் இரார்கள். அவரை நேசிக்கிறவர்கள் அவர் வழியில் நிலைகொள்வார்கள்.
19 தெய்வ பயமுள்ளவர்கள் அவருக்கு விருப்பமானவைகளைத் தேடுவார்கள். அவரை நேசிப்பவர்கள் அவர் கட்டளையால் நிறைவு அடைவார்கள்.
20 தெய்வ பயமுள்ளவர்கள் தங்கள் இதயங்களை ஆயத்தப்படுத்துவார்கள்;
21 அவர் திருமுன் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப் படுத்துவார்கள். தெய்வ பயமுள்ளவர்கள் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பார்கள்; ஆண்டவர் தங்களைத் தீர்ப்பிடும் வரையிலும் பொறுமையாய் இருப்பார்கள்.
22 ஏனென்றால், தவம் செய்யாமல் போவோமேயாகில், மனிதருடைய கைகளில் அல்ல, ஆனால் ஆண்டவருடைய கைகளில் அகப்படுவோம் என்று சொல்லிக் கொள்வார்கள். அவர் எவ்வளவு வலிமை பொருந்தியவரோ அவ்வளவு இரக்கம் உடையவராய் இருக்கிறார்.

திருப்பாடல் 52
1 வலியோனே! தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கின்றாய்? இறைவனின் பேரன்பு எந்நாளும் உள்ளது.
2 கேடுவிளைவிக்க நீ திட்டமிடுகின்றாய்; உனது நா தீட்டிய கத்தி போன்றது; வஞ்சகத்தில் தேர்ந்தோன் நீ அன்றோ!
3 நன்மை செய்வதைவிட தீமை செய்வதையே விரும்புகின்றாய்; உண்மை பேசுவதைவிட பொய் பேசுவதையே விரும்புகின்றாய். (சேலா)
4 நரம்பில்லா நாவுடையோனே! நீ விரும்பும் சொற்கள் அனைத்தும் கேடு விளைவிப்பனவே!
5 ஆகவே! கடவுள் உன்னை என்றும் மீளாதபடி நொறுக்கிவிடுவார்; உன்னைத் தூக்கி எறிவார்; கூடாரத்தினின்று உன்னைப் பிடுங்கி எறிவார்; உயிர் வாழ்வோரின் உலகினின்று உன்னை வேரோடு களைந்துவிடுவார். (சேலா)
6 நேர்மையாளர் அதன் கடுமையைக் கண்டு திகிலடைவர்; மேலும், உன்னை எள்ளி h

No comments:

Post a Comment